ரஜினியின் வளர்ச்சியை கமலால் ஜீரணிக்க முடியவில்லை: அர்ஜுன் சம்பத்
கர்நாடக முதல்வர் குமாரசாமியை கமல் சந்தித்ததற்கு உள்நோக்கம் இருப்பதாகவும், ரஜினியின் அரசியல் வளர்ச்சியை கமலால் ஜீரணிக்க முடியவில்லை என்றும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் கலந்து கொண்ட அர்ஜூன் சிங் கூறியபோது, 'ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு நாளுக்கு நாள் ஆதரவு வலுத்து கொண்டே வருகிறது. சினிமாவில் எப்படி ரஜினியை கமலால் வெல்ல முடியவில்லையோ அதேபோல் அரசியலிலும் அவரால் ரஜினியை வெல்ல முடியாது.
ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு எதிரானவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதில் தான் கமல் குறியாக உள்ளார். ரஜினி உள்பட அனைவரும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கும் நிலையில் கமல் மட்டும் குமாரசாமியை சந்தித்ததில் உள்நோக்கம் உள்ளது. ரஜினியின் செல்வாக்கு கமலின் கண்ணை உறுத்துகிறது. குமாரசாமியின் குறுகிய நோக்கமுள்ள அரசியலை கமல் ஆதரிப்பதில் இருந்தே அவருடைய உண்மை முகம் தெரிந்துவிட்டதாக அர்ஜூன் சிங் கூறியுள்ளார்.