திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 28 அக்டோபர் 2016 (18:54 IST)

’எனக்கு எதுவாவது நடந்தால் முழு காரணம் இவர்தான்’ - அதிமுக எம்எல்ஏ மீது பரபரப்பு குற்றச்சாட்டு

திருச்சியில் அதிமுக எம்எல்ஏ மகன்கள் மீது விபத்தை ஏற்படுத்தியதாக ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருப்பவர் பரமேஸ்வரி. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.  இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பரமேஸ்வரியின் இரண்டு மகன்களும் பள்ளிக்கு செல்லும் வழியில் சாலையில் நடந்து சென்ற ராஜேஷ் என்பவர் மீது தனது இருசக்கர வாகனத்தில் மோதியதாக தெரிகின்றது.
 
இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜேஷ் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். ஆனால் இங்கு அவருக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படாமல் மருத்துவர்கள் அவரை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.
 
இதன் பின் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார்.
 
ஆனால் அதிமுக எம்எல்ஏ சம்பந்தபட்ட வழக்கு என்பதால்  போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருவதாக கூறப்படுகின்றது.
 
இந்நிலையில் பாதிக்கப்பட்ட ராஜேஷ் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் எதுவாவது நடந்தால் அதற்கு முழு காரணம் எம்.எல்.ஏ  தான் என ராஜேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.