செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 17 நவம்பர் 2020 (16:09 IST)

அதிமுக எந்தக் கொம்பனுக்கும் பயப்படாது… அமைச்சர் சி.வி. சண்முகம்

இன்று சென்னை தமிழகத்தில் வைத்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.  சண்முகம் மக்கள் பிரதிநிதிகளின் குடும்பத்தினர் யாரும் டெண்டரில் கலந்துகொள்ளக் கூடாது என்ற விதி இல்லை. சக்ரபாணி மகன் பொதுஏலத்தில் கலந்துகொண்டு 1 லட்சத்திற்கு குவாரியை ஏலம் எடுத்தார். அதில் விதி மீறல் எதுவுமில்லை.

இதற்கு முறைப்படி லைசென்ஸ் பெற்றுதான் எம்.எல்.ஏ.மகன் மகன் குவாரி நடத்தி வருகிறார்.

திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை என்று காமெடி செய்ய வேண்டாம்.அதிமுக எந்தக் கொம்பனுக்கு பயப்படாது. மக்கள் பிரதிநிதிகள் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்து குவிப்பது மட்டுமே குற்றமாகும் எனத் தெரிவித்துள்ளார்.