புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 6 ஜூலை 2019 (09:00 IST)

அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் யார் ? – நீடிக்கும் இழுபறி !

ஜூலை 18 ஆம் தேதி நடக்க இருக்கும் மாநிலங்களவை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு இன்னும் இழுபறியால் நீண்டுக்கொண்டே போகிறது.

மாநிலங்களவைத் தேர்தல் வரும் ஜூலை 18 ஆம் தேதி நடக்க இருக்கிறது. சட்டமன்றத்தில் உள்ள தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்கள் பலத்தின்படி, திமுகவுக்கு 3 மாநிலங்களவை உறுப்பினர்களை பெறும் தகுதி உள்ளது. தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில் திமுக தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.  திமுக வேட்பாளர்களாக தொமுச பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் பி.வில்சன் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளராக வைகோவுக்கும் சீட் அளித்துள்ளது.

ஆனால் ஆளும் கட்சியான அதிமுக தங்கள் வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது. மூன்று வேட்பாளர்களில் பாமகவுக்கு ஒப்பந்தத்தின் சீட் கொடுப்பதா இல்லை மறுப்பதா எனக் கேள்வி எழுந்துள்ளது. இந்தத் தேர்தலில் பாஜகவோடு கூட்டணி வைத்ததால் சிறுபான்மையினர் மற்றும் இஸ்லாமியர்கள் வாக்கை இழந்து விட்டதாகக் கருத்தும் அதிமுக இரண்டு சீட்களையும் அந்தப் பிரிவினருக்குக் கொடுக்க இருக்கிறதாம். இதற்கானக் கடுமையானப் போட்டிகள் கட்சிக்குள் நடப்பதாகத் தெரிகிறது. இதனை இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட இருக்கிறார்.