திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: வியாழன், 29 ஜூலை 2021 (15:42 IST)

தற்கொலை செய்துகொண்ட அதிமுக ஊராட்சி மன்ற தலைவர்!

அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர் கடன் தொல்லைக் காரணமாக தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணத்தை அடுத்த குடவாசல் பகுதிக்கு அருகே நெடுஞ்சேரி  ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் முருகானந்தம். இவர் அதிமுக சார்பாக போட்டியிட்டு ஊராட்சி மன்றத் தேர்தலில் வென்றவர். ஆனால் தேர்தலுக்கு முன்பே இவர் பலரிடம் கடன் வாங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது. இப்போது கடனை திருப்பக் கொடுக்க முடியாமல் பிரச்சனைகளுக்கு ஆளானதால் பூச்சி மருந்து குடித்து ஆற்றங்கரை ஓரமாக மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.