ஆர்.கே.நகரில் ராப் ஸ்டைலில் தெறிக்கவிடும் அதிமுக தீம் சாங்
ஆர்.கே.நகரில் பிரசாத்துக்கு பயன்படுத்துவதற்காக அதிமுக சார்பில் தீம் சாங் ஒன்று உருவாக்கப்பட்டு ஒலிக்கப்பட்டு வருகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, டிடிவி தினகரன் ஆகிய மூவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வரும் 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலின் மூலம் மக்கள் ஆதரவு யாருக்கும் என்பது தெரிந்துவிடும்.
இந்நிலையில் திமுக, அதிமுக ஆகிய இரு அணிகளும் போட்டி போட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக பிரசாரங்களில் பாடல்கள் ஒலிக்கப்படுவது வழக்கம். இந்த முறை அதிமுக வித்தியசமாக ராப் ஸ்டைலில் பாடல் ஒன்றை உருவாகியுள்ளது. அதற்கு பெண்கள் உள்பட அனைவரும் குத்தாட்டம் போட்டு வருகின்றனர்.
ஆல் தி சென்னை மக்களுக்கு திஸ் இஸ் அவர் தீம் சாங் என தொடங்கும் பாடலில் அதிமுக அணிகள் இணைப்பு, இரட்டை இலை மீட்பு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பேச்சு ஆகிவை இடம்பெற்றுள்ளது. ஆர்.கே.நகரில் மதுசூதனனை விட டிடிவி தினகரனுக்கே அதிக ஆதரவு உள்ளது என்பது கருத்துக்கணிப்பு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.