பாஜகவிடம் எச்சரிக்கையாக இருப்போம். அதிமுக மூத்த தலைவர் பொன்னையன்!
பாஜக தனது நட்பு கட்சிகளிடம் எப்படி நடந்து கொண்டன என்பது எங்களுக்கு தெரியும் என்றும் அதனால் பாஜகவுடன் நாங்கள் எச்சரிக்கையாக இருப்போம் என்றும் அதிமுக மூத்த தலைவர் பொன்னை என் தெரிவித்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இன்று பேரறிஞர் அண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்திய அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையா அதன் பின் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார் அப்போது பாஜக தனது நட்பு காட்சிகளிடம் எப்படி நடந்து கொண்டது? அந்த கட்சிகளின் ஆட்சிகளை கவிழ்த்துவிட்டு எப்படி ஆட்சியை பிடித்தது என்றெல்லாம் எங்களுக்கு தெரியும். எனவே பாஜகவிடம் நாங்கள் தொடர்ந்து எச்சரிக்கையாக இருப்போம் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் அதிமுக வேட்பாளரை வாபஸ் பெற வைக்க பாஜக முயற்சி செய்து வந்ததாக கூறப்படும் நிலையில் அதிமுக வேட்பாளர் வாபஸ் என்ற பேச்சுக்கு இடமில்லை என அதிமுக தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva