1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 16 மார்ச் 2017 (21:43 IST)

ஆர்.கே.நகர் தேர்தலில் என்ன நடக்கும்? உளவுத்துறை அறிக்கையால் அதிமுக கலக்கம்

பெரும் பரபரப்புடன் ஆர்.கே.நகர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். தேர்தல் யுத்தத்திற்கு கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தயாராகிவிட்டன.



 


அதிமுக ஆட்சிக்கு மக்கள் எதிர்ப்பு இல்லை என்பதை நிரூபிக்கும் தேர்தலாக சசிகலா அணிக்கும், மக்கள் செல்வாக்கும், அதிமுகவும் எங்களுக்குத்தான் என்பதை ஓபிஎஸ் அணி நிரூபிக்க ஒரு வாய்ப்பாகவும் இந்த தேர்தல் உள்ளது.

அதே நேரத்தில் அதிமுக இரண்டாக இல்லை தீபாவுடன் சேர்த்து மூன்றாக பிரிந்திருக்கும் இந்த நேரத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை என்றால் திமுகவின் மானம் கப்பலேறிவிடும் என்ற காரணத்தால் இந்த இடைத்தேர்தலில் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ள செயல்தலைவர் என இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தலாக உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் உளவுத்துறை தொகுதி முழுவதும் சுற்றி வந்து மக்களின் எண்ணங்களை அறிக்கையாக வடிவமைத்து ஆட்சியாளர்களிடம் அளித்துள்ளதாம், அதில் அதிமுக ஓபிஎஸ் அணிக்கும் திமுகவுக்கும் தான் உண்மையான போட்டி என்றும் டிடிவி தினகரன் ஏதாவது அதிரடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குறிப்பிட்ட அளவுக்கு வாக்குகளை பெற முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளதாம். இந்த அறிக்கையால் அதிமுக தலைமை அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.