Daily Horoscope
✕

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ வெளிநடப்பு - தமிழக சட்டப்பேரவையில் முதல்முறை

Written By Murugan
Updated: திங்கள், 19 ஜூன் 2017 (11:15 IST)
இன்று நடந்த தமிழக சட்டசபை கூட்டத்தில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கதமிழ்செல்வன் வெளிநடப்பு செய்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் ஆதரவாளராக இருக்கும் எம்.எல்.ஏ தங்கதமிழ்செல்வன் இன்று சட்டபேரைவில் கலந்து கொண்டார். அப்போது சுகாதாரத்துறை தொடர்பாக அவர் சில கேள்விகளை எழுப்ப முயன்றார். ஆனால், இதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி அளிக்கவில்லை.
 
இதனால் அவர் சட்டபேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். பொதுவாக, ஆளுங்கட்சியை எதிர்த்து எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள்தான் வெளிநடப்பு செய்வார்கள். ஆனால், முதல்முறையாக ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏவே வெளிநடப்பு செய்திருப்பது இதுதான் முதல்முறை ஆகும்.
 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக சட்டப்பேரவை செயல்படுவதால், தினகரனின் ஆதரவாளரான தங்கதமிழ்செல்வனுக்கு உரிமை மறுக்கப்பட்டதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

எல்லாம் காட்டு

நாடே உங்கள் பக்கம்!.. விமானி ஸ்மித் மச்சாருடன் வீடியோ காலில் பேசிய மோடி!..

விலைவாசி ஏறிப்போச்சி!.. ரீல்ஸ் பாத்தா பசி போகுமா?!.. விஜய்க்கு ஸ்டாலின் கண்டனம்!...

உதயநிதியின் பேச்சால் பெண்களின் வாக்குகளை இழக்கிறதா திமுக?.. ஒரு அலசல்...

கூட்டணியை விட்டு போக சொன்னதே ஸ்டாலின்தான்!.. திருமாவளன் இப்படி சொல்லிட்டாரே!...

இந்து சமய அறநிலையத்துறை பெண் ஊழியர்களுக்கு 1 வருடம் மகப்பேறு விடுப்பு.. அதிரடி உத்தரவு...

அடுத்த கட்டுரையில்
Show comments