காவலரை கட்டிவைத்து அடித்த அமைச்சரின் சகோதரர்?
அதிமுக அமைச்சர் பழனிச்சாமியின் சகோதரர் காவலர் ஒருவரை தனது வீட்டில் கட்டிவைத்து அடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சேலம் எடப்பாடி அதிமுக அமைச்சர் பழினிச்சாமியின் வீட்டின் அருகில் வசித்து வரும் காவலர் ஒருவர், தனது வீட்டு வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமைச்சரின் வாகனத்தை சற்று தள்ளி நிறுத்துமாறு அமைச்சரின் அண்ணன் கோவிந்திடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தன், அந்த காவலரை அமைச்சரின் வீட்டுத் தூணில் கட்டிவைத்து அடித்ததுள்ளார்.
இதுபற்றி அந்த காவலர் கூறியதாவது:-
வாகனத்தை சற்று தள்ளி நிறுத்த சொன்னதுக்கு ஆத்திரமடைந்து என்னை கட்டிவைத்து அடித்தார் என்று தெரிவித்தார்.
மேலும் இந்த விடியோ காட்சி வாட்ஸ் அப்-இல் பரவி வருகிறது.