ஈபிஎஸ் படத்தை எரித்ததன் எதிரொலி: அண்ணாமலை படத்தை எரித்த அதிமுகவினர்..!
கடந்த சில நாட்களுக்கு முன்னால் எடப்பாடி பழனிச்சாமி படத்தை பாஜகவினர் எரித்த நிலையில் அதற்கு பதிலடியாக அண்ணாமலையின் படத்தை அதிமுகவினர் எடுரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் பேட்டி அளித்த அண்ணாமலை நான் ஜெயலலிதாவுக்கு ஒப்பான தலைவர் என்று கூறியிருந்தார். இதற்கு அதிமுகவின் பிரமுகர்கள் ஏற்கனவே கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது அதிமுகவினர் அண்ணாமலையின் படத்தை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா போல் நானும் ஒரு தலைவர் என்று கூறுவதா என கண்டனம் தெரிவித்து அவர்கள் அண்ணாமலை ஒழிக என்று கோஷமிட்டு அண்ணாமலையின் படத்தை எரித்தனர்.
அப்போது அங்கு வந்து காவல்துறையினர் அண்ணாமலை படத்தை அவர்களிடம் கைப்பற்றினர். நாளுக்கு நாள் அதிமுக மற்றும் பாஜகவின் மோதல் முற்றிலும் கொண்டு வரும் நிலையில் இரு கட்சிகளும் கூட்டணியில் இருக்க வாய்ப்பே இல்லை என்பது தான் தற்போதைய நிலையாக உள்ளது.
Edited by Mahendran