வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 5 மார்ச் 2019 (16:23 IST)

வெறும் 20 சீட்ட வெச்சிட்டு என்ன பண்றது? கொந்தளிப்பில் அதிமுக முக்கிய தலைகள்

வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் மற்ற கட்சிகளுடனான கூட்டணி பேச்சுவார்த்தையிலும், தொகுதி பங்கீட்டிலும் பிஸியாக உள்ளன. 
 
திமுக தங்களது கூட்டணி நிலைபாட்டை உறுதி செய்துள்ளது. அதாவது, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2, சிபிஎம் 2, சிபிஐ 2, மதிமுகவுக்கு ஒரு தொகுதி மற்றும் ராஜ்ய சபா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.  
 
அதேபோல் கொங்குநாடு மக்கள் தேசியக கட்சி, ஐஜேகே, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலா 1 தொகுதி ஒதுக்கப்பட்டு கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. 
 
இதேபோல் அதிமுகவில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை தொகுதியும், பாஜவுக்கு 5 தொகுதிகளும், புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. 
தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தமாகாவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படலாம். 
 
இப்படியிருக்க மீதம் அதிமுகவிற்கு 20 தொகுதிகள் மட்டுமே உள்ளது. கடந்த தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் அதிமுகவில் 37 சிட்டிங் எம்பிக்கள் உள்ள நிலையில், அதிமுக இம்முறை 20 தொகுதிகளிலேயே போட்டியிட இருப்பதால் அவர்களில் எத்தனை பேருக்கு மீண்டும் சீட் கிடைக்கும் என்று தெரியவில்லை. 
 
இதனால், சீட் கிடைக்காதவர்களுக்கு அதிமுக என்ன செய்யும் என்பதும் தெரியவில்லை. அதிமுக தனது கூட்டனி பேச்சுவார்த்தையை இன்னும் உறுதி செய்யாத நிலையில் இப்போதே அடுத்த பிரச்சனை துவங்கிவிட்டது.