ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 15 டிசம்பர் 2022 (20:29 IST)

அதிமுகவின் கொடிக்கம்பம் சாய்ந்து ஒருவர் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்

flag
அதிமுகவின் கொடிக்கம்பம் சாய்ந்து ஒருவர் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்
அதிமுகவின் கொடி கம்பம் விழுந்து ஒருவர் பரிதாபமாக பலியாகி உள்ள சம்பவம் மதுராந்தகம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அதிமுக கொடி கம்பம் உள்ளது என்பதும் கடந்த பல ஆண்டுகளாக இருந்த இந்த கொடிக்கம்பம் திடீரென இன்று சாய்ந்தது
 
இதனை அடுத்து அந்த கொடிக்கம்பத்தின் அருகே இருந்த ஒருவர் பரிதாபமாக பலியானதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த கொடிக்கம்பத்தில் உள்ள கொடியை கழற்றி மாற்றும்போது கம்பம் தவறி விழுந்ததாகவும் இதில் ஒருவர் பலியானதாகவும் கூறப்படுகிறது 
 
பலியானவர் அதிமுகவை சேர்ந்த செல்லப்பன் என்றும் அவரது மறைவுக்கு அதிமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 
Edited by Mahendran