1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 16 மே 2016 (11:38 IST)

திமுகவினர் மண்டை உடைப்பு: திருவண்ணாமலையில் வாக்குச்சாவடி கைப்பற்றப்பட்டது

தமிழக சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மழை காரணமாக ஆங்காங்கே வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்றாலும், மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். தமிழக சட்டசபை தேர்தலில் காலை 9மணி நிலவரப்படி 18.3சதவீத வாக்கு பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


 
 
இந்நிலையில் ஆங்காங்கே சில அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் சேப்பாபட்டு வாக்குச் சாவடியை அதிமுகவினர் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அதிமுகவினர் தாக்கியதில் திமுகவினர் 3 பேரின் மண்டை உடைந்ததாகவும், 3 வாகனம் சேதம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அந்த வாக்குச்சாவடியில் போதிய காவல் துறை அதிகாரிகள் இல்லாததால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தகவல் வந்துள்ளது.
 
மேலும், கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் அதிமுக, திமுக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு வக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.