1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 18 மார்ச் 2021 (17:10 IST)

மணல் அள்ளுவது குறித்து சர்ச்சை கருத்து: செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவா?

அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளில் இருந்த செந்தில் பாலாஜி அதன் பின்னர் திமுகவில் இணைந்து, அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். இந்த நிலையில் தற்போது அவர் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார் 
 
அதன்படி திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவியேற்ற பின்னர் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளி கொள்ளலாம் என்றும் அதை தடுக்கும் அதிகாரிகள் மாற்றப்படுவார்கள் என்று பொருள்படும் வகையில் பேசியிருந்தார் 
 
இந்த இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பதிவு செய்ததோடு பிரச்சார மேடைகளிலும் ஆவேசமாக பேசினார். கழகங்களுக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் என்றும் ஆட்சிக்கு வரும் முன்பே அதிகாரிகளை மிரட்டுவோம் என்று கூறுவது எந்த வகையில் நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்
 
இந்த நிலையில் மணல் அள்ளுவது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்