வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 22 மார்ச் 2024 (10:15 IST)

IAM WAITING.. அண்ணாமலை போட்டி குறித்து எக்ஸ் தளத்தில் அதிமுக வேட்பாளர்..!

annamalai
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிட போவதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜக தொண்டர்கள் உற்சாகமாக கோவை தொகுதியில் பணி செய்ய ஆரம்பித்துவிட்டனர்

ஆனால் அதே நேரத்தில் திராவிட கட்சிகளான அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் கோவை தொகுதியில் போட்டியிடும் நிலையில் வலிமையான இந்த இரண்டு கட்சிகளை எதிர்த்து அண்ணாமலை வெற்றி பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே கோவையில் அண்ணாமலை போட்டியிடுவது குறித்து திமுக அமைச்சர் டிஆர்பி ராஜா ’தேர்தல் முடிந்ததும் பிரியாணி ரெடி என்று கேலி செய்து ஒரு பதிவை செய்திருந்தார். அந்த வகையில் தற்போது அதே தொகுதியில் போட்டியிடும் அதிமுக போட்டியாளர் சிங்கை ராமச்சந்திரன் தனது எக்ஸ் தளத்தில் ’ஐ அம் வெயிட்டிங்’ என்று அண்ணாமலை போட்டி குறித்து பதிவு செய்துள்ளார்.

பாஜகவை பொறுத்தவரை தற்போது அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே சிம்ம சொப்பனமாக இருந்து வரும் நிலையில் இருவரும் சேர்ந்து அண்ணாமலையை தோற்கடிக்க திட்டம் தீட்டுவார்களா? அந்த திட்டத்தையும் மீறி அண்ணாமலை வெற்றி பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Mahendran