செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 23 மார்ச் 2017 (10:16 IST)

சேவல் சின்னம் யாருக்கு?: மீண்டும் மல்லுக்கட்டும் ஓபிஎஸ், சசி அணி!

சேவல் சின்னம் யாருக்கு?: மீண்டும் மல்லுக்கட்டும் ஓபிஎஸ், சசி அணி!

அதிமுக இரண்டு அணிகளாக பிளவுபட்டுள்ள நிலையில் இரட்டை இலை சின்னம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இரு அணிகளும் புதிய சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்தை இன்று காலை 10 மணிக்கு அனுக உள்ளனர்.


 
 
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால், இரண்டு அணிகளும் சேவல் சின்னத்தை பெற முயற்சி செய்து வருகிறது. இதற்கு முன்னர் அதிமுக உடைந்து ஜெயலலிதா அணி, ஜானகி அணியாக பிரிந்த போது ஜெயலலிதா சேவல் சின்னத்திலும், ஜானகி அணி புற சின்னத்திலும் போட்டியிட்டது.
 
இதில் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலலிதா அணி ஜானகி அணியை விட அதிக இடத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. இதனையடுத்து தான் அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்டெடுத்தார் ஜெயலலிதா.
 
இரட்டை இலை சின்னத்தை மீட்ட சின்னமாகவும், ஜெயலலிதாவின் சின்னமாகவும் பார்க்கப்படும் சேவல் சின்னத்தை பெற தற்போது அதிமுகவின் சசிகலா அணியும், ஓபிஎஸ் அணியும் முயற்சி செய்து வருகிறது. இதனால் இரட்டை இலைக்கு ஏற்பட்டது போல சேவல் சின்னத்துக்கும் இரு அணிகளும் மல்லுக்கட்ட உள்ளனர்.