வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (14:37 IST)

தினகரன் கட்சியில் இணைந்த நடிகை வினோதினி !

முன்னாள் பிரபல நடிகை வினோதினி டிடிவி தினகரனின் அமமுகவில் இணைந்துள்ளார்.

தமிழ்சினிமாவில் விசு இயக்கத்தில் மணல் கயிறு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை வினோதினி. அதன் பின் பாலுமகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குக் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பின்னர் பல படங்களில் நடித்த அவரால் திரையுலகில் ஜொலிக்க முடியவில்லை. பின்னர் சில காலம் அவர் சீரியல்களில் நடித்து வந்தார். பின்னர் அங்கும் வாய்ப்புகள் இல்லாததால் தனது குடும்பத்தோடு சென்னையில் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் இப்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். இன்று டிடிவி தினகரனை சந்தித்துள்ள அவரை அக்கட்சியின் உறுப்பினர் ரஞ்சித்தான் அமமுகவில் இணைய அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. சில காலம் இவர் அதிமுகவில் உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.