1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (13:06 IST)

சீமானை கைது செய்ய வேண்டும்: கமிஷனர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி புகார்!

விஜயலட்சுமி மற்றும் சீமான்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும் என நடிகை விஜயலட்சுமி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
விஜய் சூர்யா நடித்த பிரண்ட்ஸ் என்ற திரைப்படத்தில் சூர்யா ஜோடியாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. இவர் சீமானை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் சீமான் தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக பல பேட்டிகளில் கூறியுள்ளார். 
 
இந்த நிலையில் என்னை சீமான் திருமணம் செய்தது உண்மைதான் என்றும் அவரால் அவமானப்பட்டு இங்கு வந்து நிற்கிறேன் என்றும் சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். 
 
மேலும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும் என்று அவர் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran