1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: ஞாயிறு, 4 செப்டம்பர் 2016 (15:20 IST)

2 வது கணவரையும் விவாகரத்து செய்த பிரபல நடிகை!

பன்னீர் புஷ்பங்கள் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சாந்தி கிருஷ்ணா. 


 


இவர் 1984 ஆம் ஆண்டு மலையாள நடிகர் ஸ்ரீநாத் என்பவரை திருமணம் செய்தார். அதன் பிறகு 11 ஆண்டுகள் கழித்து இவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரை விவாகரத்து செய்தார். அதன் பின்னர் அமெரிக்க தொழில் அதிபரான பஜோர் சதாசிவம் என்பவரை சாந்தி திருமணம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில், தற்போது அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவரையும் சாந்தி விவாகரத்து செய்துள்ளார். இனி, சினிமாவில் தீவிரமாக கவனம் செலுத்தப் போவதாக சாந்தி கிருஷ்ணா தெரிவித்தார். மலையாளத்தில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சாந்தி, தமிழில் பன்னீர் புஷ்பங்கள், மணல் கயிறு, சிம்லா ஸ்பெஷல், அன்புள்ள மலரே, நேருக்கு நேர் ஆகிய படங்களில் நடித்து தமிழர்கள் மனதில் இடம்பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.