1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 26 நவம்பர் 2018 (11:24 IST)

களத்தில் கண்கலங்கிய கஸ்தூரி: டெல்டா விசிட்டில் நடந்த சோகம்

நடிகை கஸ்தூரி கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சந்தித்து பார்வையிட்டு அவர்களுக்கு நிதியுதவி வழங்கினார்.
 
நடிகை கஸ்தூரி சமீப காலமாக சமூக நிகழ்வுகளைப் பற்றியும், அரசியல் நிகழ்வுகளைப் பற்றியும் சமூக வலைதளத்தில் தைரியமாக கருத்து பதிவிட்டு வருகிறார்.
 
கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்கனவே கஸ்தூரி சென்னையில் இருந்து நிவாரணம் பொருட்களை அனுப்பினார்.
 
இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துக் கொண்டு மன்னார்குடிக்கு புறப்பட்டார் கஸ்தூரி. கீழக்கரை என்ற இடத்தில் தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து கிடந்ததைப் பார்த்து தலையில் கைவைத்தபடி கண் கலங்கினார் கஸ்தூரி.
பின்னர் தாம் எடுத்து வந்த நாப்கின்கள், போர்வைகள், மெழுகுவர்த்திகள், திண்பண்டங்கள் ஆகியவற்றை மக்களுக்கு அளித்தார். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கு பல முன்னணி நடிகர்களே இன்னும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை தற்பொழுது வரை பார்க்க செல்லாத நிலையில் கஸ்தூரியின் இந்த செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.
 
 
இதுகுறித்து பேசியுள்ள கஸ்தூரி விவசாயிகளுக்கு அரசு போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.