1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 23 அக்டோபர் 2023 (08:42 IST)

திடீரென பாஜகவிலிருந்து விலகிய நடிகை கௌதமி! – காரணம் என்ன தெரியுமா?

தமிழக பாஜகவில் நீண்ட காலமாக பொறுப்பில் இருந்து வந்த நடிகை கௌதமி தற்போது பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.



தமிழ்நாடு பாஜகவில் நீண்ட கால உறுப்பினராக இருந்து வருபவர் நடிகை கௌதமி. சமீபத்தில் தன்னிடம் பாஜக நிர்வாகி ஒருவர் மோசடி செய்ததாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் தற்போது பாஜகவில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளா. இதுகுறித்து பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலைக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “கனத்த இதயத்துடன் பாஜகவில் இருந்து வெளியேறுகிறேன். 25 ஆண்டுகளாக பாஜக கட்சி வளர்ச்சிக்காக உழைத்துள்ளேன். ஆனால் 2021ல் எனக்கு ராஜபாளையத்தில் சீட் கிடைக்கவில்லை. அழக்கப்பன் என்ற பாஜக நிர்வாகி என்னிடம் பணம், சொத்து மோசடி செய்ததாக புகார் அளித்திருந்தேன். ஆனால் அவருக்கு ஆதரவாகவே பாஜக மூத்த நிர்வாகிகள் செயல்படுகின்றனர்.

பாஜக வளர்ச்சிக்கு உழைத்தும் எனக்கு கட்சியில் ஆதரவு இல்லை. எனவே கனத்த இதயத்தோடு கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன்” என கூறியுள்ளார்.

Edit by Prasanth.K