Daily Horoscope
✕

தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு நடிகை அம்பிகா நேரில் ஆதரவு.. களமிறங்கும் திரையுலகினர்..!

Written By Mahendran
Updated: புதன், 13 ஆகஸ்ட் 2025 (12:00 IST)
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தூய்மை பணியாளர்கள் நடத்திவரும் தொடர் போராட்டம் 12 நாட்களை கடந்து தீவிரமடைந்து வருகிறது. அவர்களின் கோரிக்கைகளை அரசு இதுவரை ஏற்காத நிலையில், நடிகை அம்பிகா போராட்ட களத்திற்கு நேரடியாக வந்து தனது ஆதரவை தெரிவித்தார்.
 
ஏற்கனவே, பாடகி சின்மயி, நடிகை சனம் ஷெட்டி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் இந்த தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக, இன்று நடிகை அம்பிகா, போராட்டக் களத்தில் சில நிமிடங்கள் கலந்துகொண்டு தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.
 
"12 நாட்களாக போராடி வரும் இந்தப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்" என்று அம்பிகா கோரிக்கை விடுத்தார். திரைத்துறை பிரபலங்களின் தொடர்ச்சியான ஆதரவு, தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு மேலும் வலு சேர்த்து வருகிறது.
 
Edited by Mahendran
 

எல்லாம் காட்டு

கள்ளக்குறிச்சி விவகாரம்.. சிபிஐ விசாரணை தேவையில்லை.. திமுக மனுவுக்கு நீதிபதி பதில்...

AI தொடர்பான கேள்வி!.. புதினை அசரவைத்த இந்திய சிறுவன்....

தூணில் தீபம் ஏற்றுவது ஆட்சியரின் பணி அல்ல.. உச்ச நீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர்

ஒரு வருடத்தில் இங்கிலாந்தில் குடியேறிய 7.38 லட்சம் இந்தியர்கள்!...

ஹைதராபாத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் கிளை.. சென்னையில் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments