1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (14:34 IST)

தமிழக வெற்றி கழகம்..! நடிகர் விஜயின் கட்சி பெயர் அறிவிப்பு.!!

vijayy
நடிகர் விஜய் தொடங்கியுள்ள புதிய கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டுள்ளது.
 
நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல் கடந்த பல மாதங்களாகவே வட்டமடித்து வந்தது. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மாணவர்களுக்கு பரிசு, பயிலகம், நூலகம், நிவாரண உதவிகள் என விஜய்யின் நகர்வுகளும் அதை நோக்கியே பயணித்தது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினரின் செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் அரசியல் கட்சிகள் கூர்ந்து கவனித்து வருகின்றன
 
அண்மையில் சென்னை பனையூரில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அரசியல் கட்சியை பிப்ரவரி முதல் வாரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது குறித்து விஜய் ஆலோசித்ததாக தகவல் வெளியானது.

 
இந்நிலையில் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் விஜயின் கட்சி  பெயர் பதிவு செய்யப்பட்டது. அதன்படி நடிகர் விஜய் தொடங்கியுள்ள புதிய கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டுள்ளது. இதை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.