காலில் விழ வந்த ரசிகரை அடித்தாரா கமல்ஹாசன்?
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவேன் என அறிவித்துவிட்ட நிலையில், அவரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்கலில் பலரும் அவதூறு தெரிவித்து வருகின்றனர்.
கமல்ஹாசன் தனது காலில் விழுந்து வணங்கும் ரசிகர் ஒருவரை கன்னத்தில் அறைவது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதாளங்களில் வைரலாக பரவியது. அவர் ரமேஷ் அரவிந்துடன் வெளியே சென்று திரும்பும்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்நிலையில், இந்த வீடியோவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கமல்ஹாசன் ரசிகர்கள் அதே வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் கமல்ஹாசன் வரும்போது காவலர் அந்த ரசிகரை முன்னே இழுத்துச் செல்வது தெளிவாக உள்ளது. காலையில் பரவிய வீடியோவில் கமல்ஹாசன் கை நீட்டுவது மட்டும்தான் உள்ளது.
அதை வைத்து அவர் ரசிகரை அறைந்துவிட்டார் என்ற வதந்தியை பரப்பி வந்தனர். மேலும், அந்த வீடியோவில் இடம்பெற்ற சம்பவம் கமல்ஹாசன் உத்தம் வில்லன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து கமல்ஹாசன் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசனுக்கு காலில் விழுவது பிடிக்காது. இதையடுத்து அவர் தன் ரசிகர் காலில் விழ முயன்ற போது அவரை தடுத்தார், தள்ளிவிடவில்லை'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.