திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 28 ஜூன் 2017 (15:48 IST)

திருப்பி அடி.. ஜூலியை ஏத்திவிடும் நடிகர் பரணி : பிக்பாஸ் கலாட்டா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டே இருக்கிறது.


 

 
இதில் அதிகமான செய்திகள் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முழக்கமிட்ட பிரபலமான ஜூலியை சுற்றியதாகவே இருக்கிறது. நடிகர் ஸ்ரீ-யிடம் ‘எனக்காக இரு.. போகாதே.. நான் கட்டிப்பிடிக்கக்கூட ஆள் இல்லை” எனக் கூறும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 
 
அதன் பின், நடிகர் வையாபுரி தேம்பி தேம்பி அழுவது போல் ஒரு வீடியோ வெளியானது. அதே வீடியோவில் நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம், இதுக்குத்தான் இந்த மாதிரி எச்சைங்களோட நான் வர மாட்டேன்னு சொன்னேன். நான் ஃபர்ஸ்ட்டே சொன்னேன். எனக்கு யார் அவங்க என கூறுகிறார். 
 
காயத்ரி ரகுராம் இப்படி பேசியது தான் நடிகர் வையாபுரி கதறி அழுவதற்கு காரணமா என சமூக வலைதளங்கில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. அதேநேரம் டிஆர்பிக்காக விஜய் தொலைக்காட்சியே இப்படி செய்ய வைக்கிறதா என்ற பேச்சுக்களும் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.


 

 
இந்நிலையில், தற்போது விஜய் டிவி மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது. அதில், ஜூலியிடம் நமீதா, சினேகன் மற்றும் சிலர் சண்டை போடுகிறார்கள். அதன் பின் தனியாக அமர்ந்திருக்கும் ஜுலியிடம் நடிகர் தரணி ‘உன்னை அவர்கள் டார்கெட் செய்கிறார்கள். நீ திருப்பி அடி.. அடங்கிவிடுவார்கள்’ என அறிவுரை கூறுகிறார்.
 
இதுபற்றிய முழுமையான வீடியோ இன்று ஒளிபரப்பாகும் எனத் தெரிகிறது.