''ரஜினியின் புகைப்படம், குரலைப் பயன்படுத்தினால் நடவடிக்கை''- ரஜினியின் வழக்கறிஞர் அறிவிப்பு
நடிகர் ரஜினி பெயர் மற்றும் குரலை அனுமதியின்றி பயன்படுத்தினால் குற்றவியல் மற்றும் உரிமையியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தியா முழுவதும் பிரபலமானவராக அறியப்படுகிறார்.
இந்த நிலையில், சில நிறுவனங்கள் அவரது பெயர், புகைப்படம் மற்றும் குரலைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இது பொதுமக்கள் மத்தியில் அதிகக் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றதால், இதுகுறித்து ஒரு அறிவிப்பை ரஜினியின் வழக்கறிஞர் இளம் பாரதி வெளியிட்டுள்ளார்.
அதில், ரஜினிகாந்துன் புகைப்படம், குரல், மற்றும் புகைப்படத்தை பல உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதால், ஒப்புதல் இன்றி வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தினால் உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.