வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 12 ஏப்ரல் 2021 (14:05 IST)

ஆத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இந்த அலை காரணமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகிறது என்பதும் தெரிந்ததே.
 
மேலும் தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் முகக் கவசம் அணியாமல் இருந்ததால் தான் இந்த அளவுக்கு தீவிரமாக கொரோனா பரவி வருவதாக கூறப்படுகிறது
 
மேலும் தேர்தல் காரணமாக தேர்தல் பிரச்சாரம் செய்த வேட்பாளர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் மேலும் சில வேட்பாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஆத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெய்சங்கர் என்பவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை செய்து வருகிறார்கள் நம் தகவல்கள் வெளிவந்துள்ளன