1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 6 ஜூன் 2018 (08:06 IST)

நீட் தேர்வால் மேலும் ஒரு மாணவி தற்கொலை

நீட் நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் ஐதராபாத்தை சேர்ந்த மாணவி 10-வது மாடியிலிருந்துஇருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வால் நடைபெறும் தற்கொலைகள் அதிகரித்துக்கொண்டே போகிறது. சென்ற வருடம் நீட் தேர்வில் தோல்வியடைந்த தமிழகத்தை சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
 
அதேபோல் நேற்று முன்தினம் வெளியான நீட் தேர்வு முடிவில் தோல்வியடைந்ததால் விழுப்புரம் மாணவி பிரதீபா விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். மேலும் டெல்லியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே, ஐதராபாத்  மாணவி ஜஸ்லீன் கவுர்(18), நீட் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியாததால், ஒரு வணிகவளாகத்தின் 10 மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். 
 
பல ஆசைகளோடும் கனவுகளோடும் மருத்துவர் ஆகிவிடுவோம் என்ற எண்ணத்தில் இருந்த மாணவ மாணவிகளின் மருத்துவ ஆசையை பறித்ததோடு, அவர்களின் விலைமதிப்பற்ற உயிரையும் பறித்துள்ளது இந்த மத்திய அரசு.