வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 18 ஜூலை 2019 (13:38 IST)

பள்ளிக்கூடம் போக பஸ்ஸில் ஏறிய பாம்பு: மாணவர்கள் ஓட்டம்

ஆரணி அருகே தனியார் பள்ளி பேருந்து ஒன்றினுள் திடீரென எட்டு அடி நீள பாம்பு புகுந்ததால் மாணவர்கள் அலறியடித்து ஓடினர்.

ஆரணியை அடுத்த புதுப்பாளையம் அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளிக்கு சொந்தமான பேருந்தில் சுற்றுபுற கிராமங்களில் உள்ள மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருவது வழக்கம்.

நேற்று வழக்கம்போல மாணவர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து வந்துக்கொண்டிருந்தபோது பேருந்துக்குள் 8 அடி நீள சாரைப்பாம்பு சுருண்டு படுத்திருந்திருக்கிறது. மாணவர்களின் சத்தத்தால் டிஸ்டர்ப் ஆன பாம்பு வெளியே எட்டி பார்த்திருக்கிறது. பாம்பை கண்டதும் மாணவர்கள் அங்கும் இங்கும் அலறி ஓடியிருக்கின்றனர். இதை பார்த்த டிரைவர் உடனே வண்டியை நிறுத்தியிருக்கிறார். மாணவர்கள் பேருந்தி விட்டு இறங்கி ஓடியதும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சேர்ந்து பாம்பை பிடித்திருகின்றனர்.