வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 5 செப்டம்பர் 2020 (17:49 IST)

செப்.14-ம் தேதி முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படுகிறதா? இணையத்தில் பரவும் வதந்தி

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்த கல்வி ஆண்டு மாணவர்களுக்கு பறிபோய் விடுமோ என்ற அச்சம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உள்ளது
 
இந்த நிலையில் வரும் டிசம்பர் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என மத்திய அரசும் ஒரு சில மாநில அரசுகளும் தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி மாதம் பள்ளி கல்லூரிகள் திறந்து ஏப்ரல் மாதத்திற்குள் எப்படி ஒரு கல்வியாண்டின் பாடத்தை முடிக்க முடியும் என்பதே பெரும் கேள்வியாக உள்ளது 
 
இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களாக சமூக வலைதளங்களில் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அக்டோபர் 1 முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என்றும் வதந்திகள் மிக வேகமாக பரவி வருகிறது. ஆனால் இது குறித்து விளக்கம் அளித்த தமிழக அரசு, பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்த செய்திகளும், திரையரங்குகள் திறக்கப்படும் என்ற செய்திகளும் வதந்திகள் என்றும், பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் திறக்கப்படும் தேதி குறித்த அறிவிப்பை தமிழக அரசு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது