1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 3 ஜூலை 2022 (14:27 IST)

சென்னை மெரினாவில் ஓட ஓட விரட்டி வெட்டிய ரெளடிகள்: அதிர்ச்சியில் பொதுமக்கள்

marina violence
சென்னை மெரினாவில் ஓட ஓட விரட்டி வெட்டிய ரெளடிகள்: அதிர்ச்சியில் பொதுமக்கள்
சென்னை மெரினாவில் 5 பேர் கொண்ட கும்பல் ஒருவரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னையில் இன்று காலை 6 மணிக்கு பொதுமக்கள் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென ஒருவரை ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் ஓட ஓட விரட்டியது
 
கையில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த அந்த கும்பல் அவரை சுற்றிவளைத்து வெட்டியதாக தகவல் தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து உள்ளனர் 
 
அதிகாலை 6 மணி அளவில் சென்னையில் நடந்த இந்த சம்பவம் நடைப்பயிற்சி செய்து கொண்டு இந்த பொது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது
 
இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது