Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு மையத்தில் மீண்டும் குழப்பம் – 600 மாணவர்கள் பாதிப்பு !

Updated: வெள்ளி, 3 மே 2019 (15:03 IST)
தமிழகத்தில் இன்னும் 2 நாட்களில் நீட் தேர்வுகள் நடக்க உள்ள நிலையில் திருநெல்வேலியில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்கள் மதுரைக்கு மாற்றப்படவுள்ளன.

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வாக நீட் தேர்வை மத்திய அரசு அறிவித்ததை அடுத்து தமிழகத்தில் அதற்கெதிரான போராட்டங்கள் நடக்க ஆரம்பித்தன. தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பின் தமிழக அரசு நீட் தேர்வை தடுக்க தவறியது. இதனால் தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறத்யு. இதில் அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.

நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அணிதா எனும் மாணவி தற்கொலை செய்துகொண்டதை அடுத்து அது மிகப்பெரிய விவாதப் பொருளானது. அதையடுத்து இந்த மக்களவைத் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் நீட் தேர்வை ரத்து செய்வோம் என அறிவித்துள்ளது. ஆனாலும் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு  மே 5 ஆம் தேதி நடக்க இருக்கிறது.

இதையடுத்து சென்ற ஆண்டு போல தமிழக மாணவர்களுக்கு தொலை தூரத்திலும் அண்டை மாநிலத்திலும் தேர்வு மையங்கள் ஒதுக்கி சிரமப்படுத்தியாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து இந்த் ஆண்டு தமிழில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆங்கிலத்தில் தேர்வு எழுதும் சில மாணவர்களுக்கு மட்டும் அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இப்போது தேர்வுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளநிலையில் மதுரை மற்றும் திருநெல்வேலியில் உள்ள சில தேர்வுமையங்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் சில மையங்களை திருநெல்வேலியில் இருந்து மதுரைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த தேர்வு மையங்களில் தேர்வெழுத இருந்த 600 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

எல்லாம் காட்டு

சவுக்கு சங்கரின் மகன் தற்கொலையா?.... நெட்டிசன்கள் ஷாக்!...

Old Monk, Royal Challenger மதுபானங்களுக்கு தடை!.. இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் அதிரடி.

ரூ.88 கோடி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய பெண் கணவருடன் கைது... சிபிஐ அதிரடி நடவடிக்கை...

இன்று ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு ரூ. 2,240 உயர்ந்து அதிர்ச்சி

அடுத்த கட்டுரையில்
Show comments