புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 14 ஜூன் 2018 (09:45 IST)

18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: நமது அம்மா நாளிதழின் கவிதை

தினகரன் அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏக்களின் வழக்கின் தீர்ப்பு இன்று வெளிவரவுள்ளது. இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டாலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவரகள் உடனே சுப்ரீம் கோர்ட் சென்றால் இதே நிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழில் 18 எம்.எல்.ஏக்கள் குறித்து ஒரு கவிதை வெளிவந்துள்ளது. பதினென்கீழ்கணக்கு என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த கவிதையில், 'அதிமுகவில் இருந்து விலகி, வழிமாறிச் சென்று சேராத இடம் சேர்ந்து பதவியை இழந்து, மீண்டும் உயிர்வந்து வாழுமோ என விழி பிதுங்கி நிற்போரின் எண்ணிக்கை 18. பதவி தந்த இயக்கத்தை மறந்து, பாசத்தாய் கட்டம் கட்டி வெளியேற்றிய பாதகக் கூட்டத்தோடு சேர்ந்தால், சேதாரம் தானே! என்று கவிதை வடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும் 'சகுனியை சார்ந்தோம் அழிந்ததும், சாரதியாம் கண்ணனை சார்ந்தோர் வாழ்ந்ததும், அவனை நம்பிய அவல் குசேலனும், அதிகுபேரன் ஆனதும், குலம் பார்த்து கூடியதால் மட்டுமே' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும் 'வாய்மையின் வழிநின்று வணங்கும் கைகளுக்கு மட்டும்தான் அதுவிலகுமுனே வரங்கள் வாய்க்கிறது' என்றும் அந்த கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கவிதையை அதிமுகவினர் ரசித்து படித்து வருகின்றனர்.