ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: கோயம்புத்தூர் , சனி, 29 ஜூன் 2024 (14:41 IST)

இயற்கை பாதுகாப்பு மற்றும் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாரத்தான் போட்டி

கோவை சத்தி சாலையில் உள்ள சரவணம்பட்டி அருகே புரோஜோன் மால் சார்பாக கோ க்ரீன் மாரத்தான் தொடர் ஓட்ட நிகழ்வு வருகின்ற ஜூன் 30-ம் தேதி நடைபெற உள்ளது.
 
பொதுமக்களிடையே இயற்கை பாதுகாப்பு மற்றும் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற உள்ளது.
 
இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் டி-ஷர்ட் அறிமுக விழா  புரோஜோன் மாலில் நடைபெற்றது.
 
இதில் புரோசோன் மால் நிர்வாக அதிகாரிகள் விஜய் பாட்டியா,பாபு,பிரிங்ஸ்டன் நாதன்,முஷம்மல்,சுபத்ராதேவி ஆகியோர் கலந்து கொண்டு மாரத்தான் டி ஷர்ட்டை அறிமுகம் செய்து வைத்து பேசினர்.ஜூலை 30ந்தேதி நடைபெற உள்ள,போட்டயை கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைப்பதாக கூறிய அவர், மாரத்தான் போட்டியில் பல்வேறு திரை பிரபலங்கள்,முக்கியஸ்தர்கள் என  5000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.
 
இந்த மாரத்தான் போட்டியில் குழந்தைகள்,ஆண்,பெண்கள் என பிரிவுகளாக நடைபெற உள்ளதாகவும்,  போட்டியில் அரசு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கட்டணம் இல்லாமல்  போட்டியில் பங்கு பெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
தனியார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 150 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
மாரத்தான் போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் டி-ஷர்ட், மெடல்,சான்றிதழ் மற்றும் காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
 
வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு பிரிவு வாரியாக ரூபாய் இரண்டு இலட்சம் ரொக்க பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.