புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 12 நவம்பர் 2018 (15:59 IST)

மூத்தாருடன் உல்லாசம்: ஓடும் பேருந்தில் நடந்த கோரம்

நெல்லை அருகே கள்ளக்காதல் ஜோடி பேருந்தில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தை சேர்ந்தவர் நயினார். இவரது மனைவி இலக்கியா. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இலக்கியாவிற்கு நயினாரின் அண்ணன் மணிகண்டனுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இருவரும் அவ்வப்போது தனிமையில் உல்லாசமாய் இருந்துள்ளனர்.
 
இதனையறிந்த நயினார் மனைவியை கண்டித்துள்ளார். கணவருக்கு உண்மை தெரிந்துவிட்டதே என்ற வருத்தத்தில் இலக்கியா தனது தாய் வீட்டிற்கு பஸ்சில் சென்றுள்ளார். அவருடன் மணிகண்டனும் சென்றுள்ளார்.
 
இருவரும் பஸ்சில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து அவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
கள்ளக்காதல் விபரீதத்தால் இரு குடும்பங்கள் நிர்கதியாய் தவிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.