திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 3 ஜனவரி 2019 (09:54 IST)

இனிக்க இனிக்க பேசி 15 லட்சத்தை ஏப்பம்விட்ட 2வது புருசன்: களத்தில் குதித்த மனைவி

2வது கணவன் தன்னை ஏமாற்றி பணம் பறித்ததால், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
 
தமிழகத்தை சேர்ந்த பிரபா என்ற பெண் குவைத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரிடமிருந்து விவாகரத்து பெற்று குவைத்தில் தனியாக வசித்து வந்தார்.
 
குவைத்தில் பிரபாவிற்கு தஞ்சையை சேர்ந்த நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறி பிரபா அவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டனர். அந்த நபர் தொழில் தொடங்கலாம் என கூறி பிரபாவிடம் 15 லட்சத்தை வாங்கியதாக தெரிகிறது. பின்னர் பிரபாவை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை அவர் திருமணம் செய்ய திட்டமிட்டு வந்ததாக தெரிகிறது.
 
இதுகுறித்து பிரபா தனது கணவரிடம் கேட்டபோது, அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து குவைத்திலிருந்து தஞ்சை வந்த பிரபா, தனது இரண்டாவது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் நிலைய வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால், அவர் அங்கிருந்து சென்றார்.