சென்னையில் வாலிபர்களை குறிவைக்கும் சினிமா அழகி
சென்னையில் சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி இளம்பெண் ஒருவர் பல வாலிபர்களிடம் பணத்தை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த ரோஷன் என்ற வாலிபர் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு நண்பர் ஒருவர் மூலம் வளசரவாக்கத்தை சேர்ந்த வித்யா என்ற பெண் அறிமுகமானார்.
வித்யா ரோஷனிடம் தாம் சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றுவதாகவும், உங்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருகிறேன் எனவும் கூறியுள்ளார். இதனை ரோஷனும் நம்பியுள்ளார். இதையடுத்து வித்யா ரோஷனிடம் 2 பவுன் தங்க சங்கிலியை வாங்கியுள்ளார்.
ஆனால் அவருக்கு நடிக்க வாய்ப்பு வாங்கி தராமலும் கொடுத்த நகையை திரும்ப தராமலும் இருந்துள்ளார். ரோஷன் வித்யாவை தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர் போன் ஸ்விட்ச் ஆபில் இருந்தது.
இதையடுத்து அவர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. வழக்கு பதிந்த போலீஸார் வித்யாவை கைது செய்து அவரிடமிருந்து நகையை மீட்டனர். மேலும் வித்யா இதேபோல் பல ஆண்களை மயக்கி வித்யா பணம் பறித்தது விசாரணையில் அம்பலமானது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.