ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 மே 2024 (17:53 IST)

சமோசா கடையில் வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர்! திருநெல்வேலியில் அதிர்ச்சி! – வீடியோ!

Tirunelveli fire accident
திருநெல்வேலியில் கடைத்தெரு ஒன்றில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருநெல்வேலியில் உள்ள மக்கள் அதிகம் புழங்கும் பகுதியில் வடை, சமோசாக்கள் விற்கும் கடை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. கடையில் அன்றாட வேலைகள் நடந்து வந்த நிலையில் திடீரென கேஸ் சிலிண்டரில் இருந்து தீ பிடித்துள்ளது. அந்த தீ பரவி அந்த கடை முழுவதும் எரியத் தொடங்கிய நிலையில் பக்கத்துக்கடைக்கார்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றுள்ளனர்.

ஆனால் தீ மளமளவென அதிகரித்துள்ளது. இந்நிலையில் திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து அங்கு பெரும் தீப்பிழம்பு ஏற்பட்டது. இதை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்திருந்த நிலையில் அது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும், ஆனால் ஒரு நபர் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K