புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 11 டிசம்பர் 2018 (15:54 IST)

திருடி திண்ணும் ஊழியர்: ஆன்லைன் ஃபுட் டெலிவரி மோசடி: மதுரையில் பரபரப்பு

மதுரையில் தனியார் ஆன்லைன் ஃபுட் டெலிவரி ஊழியர் ஒருவர் கஸ்டமருக்கு கொடுக்க வேண்டிய உணவை நடுரோட்டில் திருடி சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நவீன காலக்கட்டத்தில் கையில் மொபைல் இருந்தால் போதும், வேண்டிய உணவை இருப்பிடத்திற்கே வரவைக்கலாம். அப்படி மக்களிடையே பெரும் பேமஸ் தான் ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற ஆன்லைன் ஃபுட் டெலிவரி நிறுவனங்கள்.
 
வேண்டிய உணவை போனில் ஆர்டர் செய்தால் போதும், இருக்கும் இடத்திற்கே அந்த நிறுவன ஊழியர்கள் நாம் ஆர்டர் செய்த உணவை வந்து கொடுப்பார்கள்.
 
இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் வீடியோவை பார்த்தால் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடும் ஆசையே போய்விடும். தனியார் ஆன்லைன் ஃபுட் டெலிவரி ஊழியர் ஒருவர், தன் பையில் கஸ்டமருக்கு கொடுக்க வேண்டிய உணவுப் பொட்டலத்தை ஒவ்வொன்றாக எடுத்து அதில் உள்ள உணவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சாப்பிடுகிறார். அதிகமாக சாப்பிட்டால் தெரிந்துவிடும் என்பதற்காக ஒவ்வொரு பொட்டலத்திலும், கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சாப்பிட்டு விட்டு ஒன்றும் தெரியாதது போல அங்கிருந்து செல்கிறார்.
 
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.