வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 15 நவம்பர் 2021 (20:31 IST)

20 ஆண்டுகளாக அரியர் வைத்த மாணவர்களுக்கு அண்ணா பல்கலை வழங்கிய வாய்ப்பு!

20 ஆண்டுகளாக அரியர் வைத்த மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது
 
20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்காக தனியாக முப்பத்திமூன்று மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணா பல்கலைகழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார் 
 
வரும் டிசம்பர் மாதம் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆரியர் வைத்துள்ள மாணவர்களின் வசதிக்காக முப்பத்திமூன்று மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரியரை கிளியர் செய்ய செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படும் உள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்
 
மேலும் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் வரும் 18-ம் தேதிக்குள் தேர்வு மையத்தை தாங்களாகவே தேர்வு செய்துகொள்ளலாம் என்றும் எந்த மையத்தையும் தேர்வு செய்யவில்லை என்றால் ஏதேனும் ஒரு மையம் அவருக்கு ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது