தமிழகத்தில் மணல் குவாரிகள் மூடல்
விழுப்புரம், திருச்சி, அரியலூர், கரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மணல் தட்டுப்பாடு காரணமாக ஒரு லோடு மணல் ரூ.35,000 வரை விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து தமிழகத்தில் செயல்பட்டு வந்த 9 மணல் குவாரிகள் மூடப்பட்டது. விழுப்புரம், திருச்சி, அரியலூர், கரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து ஒரு லட்சம் மணல் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் மேலும் மணல் தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் முனிரத்தினம், தமிழகத்தில் அதிக அளவில் மணல் குவாரிகள் திறக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.