வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 26 டிசம்பர் 2024 (12:17 IST)

ஒரு ஆண்டில் 8.30 கோடி ப்ளேட் பிரியாணி விற்பனை! 10 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம்! பிரியாணி இவ்வளவு விரும்பப்படுவது ஏன்?

Biryani 2024

இந்த ஆண்டில் அதிகம் விற்பனையான ஆன்லைன் உணவுகளில் கடந்த ஆண்டை போலவே பிரியாணி மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது.

 

 

இந்தியா முழுவதும் மாநிலத்திற்கு மாநிலம் பல விதமான உணவு வகைகள் இருந்து வந்தாலும், பிரியாணி அனைவருக்குமான விருப்ப உணவாக உள்ளது. தமிழ்நாட்டில் ஆம்பூர், திண்டுக்கல் பிரியாணி, கேரளாவில் தலச்சேரி பிரியாணி, தெலுங்கானாவில் ஹைதராபாத் பிரியாணி என ஏரியாவுக்கு ஏரியா விதவிதமான பிரியாணிகள் கிடைக்கின்றன.

 

இந்த ஆண்டில் ஆன்லைன் உணவு டெலிவரி செயலிகள் மூலம் பெறப்பட்ட ஆர்டர்களில் சிக்கன் பிரியாணி முதல் இடத்தில் உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் ஸ்விகி உணவு டெலிவரி மட்டும் 8.30 கோடி ப்ளேட் பிரியாணிகளை விற்றுள்ளது. அதாவது ஒரு வினாடிக்கு 2 ப்ளேட் பிரியாணி என்ற கணக்கில் விற்பனை இருந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 29 சதவீதம் அதிகமாகும்.
 

 

தமிழ்நாட்டில் ஆண்டு ஒன்றுக்கு ஆன்லைன் மூலமாக நேரடியாக என பல வகைகளிலும் சுமார் ரூ.10 ஆயிரம் கோடிக்கு பிரியாணி விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் அதிகமாக பிரியாணி விற்கப்படும் நகரமாக சென்னை உள்ளது. சென்னையில் மட்டும் நாள்தோறும் சுமார் 1000 கிலோவிற்கும் மேல் பிரியாணி வகைகள் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. 

 

பிரியாணி மீது மக்களுக்கு இவ்வளவு பிரியம் ஏன் என்ற கேள்விக்கு அதன் சுவையும், நன்றாக வெந்த கோழிக்கறியுமே காரணம் என பலரும் கூறுகின்றனர். மேலும் சிக்கன் பிரியாணி வகைகள் ரூ.80 ரூபாய் தொடங்கி ரூ.150 வரை கடைகளுக்கு ஏற்ற விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில் சாதாரண மக்கள் எளிதில் வாங்கி உண்பதற்கு வசதியாக இருப்பதும், இதன் விற்பனை பெருநகரங்களில் அதிகமாக இருப்பதற்கான காரணம் என சொல்லப்படுகிறது.

 

Edit by Prasanth.K