வகுப்பறையில் போதைப்பொருள்.. 7 மாணவர்களை சஸ்பெண்ட் செய்த தலைமை ஆசிரியர்..!
வகுப்பறையில் போதை பொருளை பயன்படுத்தியதாக ஏழு மாணவர்களை தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்து விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் வாணியம்பாடி பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்துக்கொண்டே வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிய நிலையில் வாணியம்பாடி பகுதியில் பள்ளி மாணவர்களை குறி வைத்து போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் வாணியம்பாடி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில் அவர்களில் ஏழு மாணவர்கள் நடத்தையில் சந்தேகம் இருந்ததை எடுத்து ஆசிரியர் அவர்களுடைய பையை சோதனையிட்டார்.
அப்போது போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் செல்லப்பட்டனர். தலைமை ஆசிரியர் அவர்களை விசாரணை செய்து போதைப்பொருள் வைத்திருந்த ஏழு மாணவர்களை ஒரு வாரம் பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva