புதன், 5 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 14 ஜூலை 2016 (10:27 IST)

5 வயது சிறுமியிடம் 58 வயது ஆண் சில்மிஷம்

பல்லாவரத்தில் 58 வயது ஆண் ஒருவர் 5 வயது சிறுமிக்கு சாக்லெட் வாங்கிகொடுத்து பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்துள்ளார்.


 

 
பல்லாவரம், கண்ணபிரான் தெருவைச் சேர்ந்த 5 வயது சிறுமி 1–ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய சிறுமியிடம், வீட்டின் உரிமையாளர் எரோன் மோசஸ்(58) என்பவர் சாக்லேட் வாங்கி கொடுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
 
இதனால் அழுது கொண்டே வீட்டுக்கு சென்ற சிறுமி, தனது பெற்றோரிடம் இதுபற்றி கூறியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை, தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் எரோன் மோசஸ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.