நெருங்கும் தேர்தல் தேதி - திமுகவிலிருந்து 56 பேர் தற்காலிக நீக்கம்!

Written By Sugapriya Prakash
Updated: திங்கள், 14 பிப்ரவரி 2022 (17:27 IST)
அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்துபோட்டியிட்ட காரணத்திற்காக 56 பேர் திமுகவிலிருந்து தற்காலிக நீக்கப்பட்டுள்ளனர். 

 
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் தினத்தன்று வாக்குப்பதிவு காலை 7 முதல் மாலை 5 மணி வரையிலும், கொரோனா பாதித்தவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் திமுக மற்றும் தோழமை கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட கட்சியினர் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
 
நீக்கப்பட்ட 56 திமுகவினரும் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருப்பூர், தருமபுரி, சேலம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

எல்லாம் காட்டு

உறுதி அளித்தால் உண்ணாவிரதத்தைக் கைவிடத் தயாராக இருக்கிறேன்- சோனம் வாங்சுக்

ஜெயில் ஜாலியா இருக்கு!.. விரைவில் ஆட்சி மாறும்!. மார்க்கண்டேயன் பேட்டி!...

ஈரானுக்கு எதிரான போரில் 3.6 லட்சம் கோடி செலவு!.. அமெரிக்கா அறிவிப்பு..

இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ள அசத்தல் போட்டி.. வெற்றி பெற்றால் ரூ.75,000 பரிசு...

தமிழகத்துக்கு வரும் ராஜேஷ் லக்கானி!. செந்தில் பாலாஜிக்கு சிக்கல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments