வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 23 மார்ச் 2017 (00:08 IST)

இரட்டை இலை சின்னம்: தேர்தல் ஆணையம் கூறிய 5 முக்கிய விஷயங்கள்

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை முடிவு செய்யும் முன்னர் இரு அணிகளின் வாதங்களையும் கேட்ட தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடையாது என்று கூறியதோடு இரு அணிகளும் அதிமுக என்ற கட்சியின் பெயரையும் பயன்படுத்த கூடாது என்று கூறியதுதான் யாரும் எதிர்பார்க்காத டுவிட்ஸ்ட். மேலும் இதுகுறித்து தேர்தல் ஆணையம் கூறியுள்ள ஐந்து முக்கிய விஷயங்களை பார்ப்போம்


 


1.  இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடையாது. அச்சின்னம் முடக்கப்படுகிறது.

2. ஒரு அணிகளும் அதிமுக என்ற கட்சியின் பெயரை பயன்படுத்தக் கூடாது.

3. தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 85 சின்னங்களில் ஏதாவது மூன்று சின்னங்களை இரண்டு அணிகளும் தங்களுக்கு தேர்வு செய்து கொள்ள வேண்டும். தேர்வு செய்த தகவலை இன்று காலை 10 மணிக்குள் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும்.

4. அதிமுக என்ற பெயர் இல்லாத வேறு ஒரு பெயரை, இரு அணிகளும் தேர்வு செய்து அது குறித்த தகவலையும் காலை 10 மணிக்குள் தங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

5. இரு தரப்பும் தங்களுக்கு சாதகமான ஆவணங்களை வரும் ஏப்ரல் 17-ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தால் மீண்டும் இரட்டை இலை சின்னம் குறித்து விசாரிக்கப்படும்

மேற்கண்ட ஐந்து விஷயங்கள் சசிகலா , ஓபிஎஸ் ஆகிய இரு பிரிவினர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது