தமிழ் தேர்வை தொடர்ந்து முக்கிய பாடத் தேர்வுகளுக்கும் ஆப்சென்ட்: 47000 மாணவர்கள் எங்கே?
நடைபெற்று வரும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் தமிழ் பாடத்தை மட்டும் 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என்ற நிலையில் தற்போது முக்கிய தேர்வையும் சுமார் 47 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடைபெற்று வருகிறது என்பதும் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த தேர்வை எழுதி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் நடந்த தமிழ் மொழி தேர்வை சுமார் 50,000 மாணவர்கள் எழுதவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களும் விளக்கம் அளித்து இருந்தார்
இந்த நிலையில் தமிழ் தேர்வை தொடர்ந்து நேற்று நடந்த முக்கிய தேர்வையும் சுமார் 47 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறை என்ன விளக்கம் அளிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edited by Mahendran