சிறையில் இருக்கும் நளினி கணவர் முருகன் மீது 4 பிரிவுகளில் வழக்கு: விடுதலையே இல்லையா?
சிறையில் இருக்கும் நளினி கணவர் முருகன் மீது 4 பிரிவுகளில் வழக்கு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் ஏழு பேர்களில் ஒருவர் நளினியின் கணவர் முருகன். இவரது மனைவி நளினியும் கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. இது குறித்து தமிழக அரசு ஏற்கனவே தீர்மானம் ஒன்றை இயற்றி கவர்னருக்கு அனுப்பி உள்ளது என்பதும் கவர்னர் இதுகுறித்த முடிவை கடந்த பல ஆண்டுகளாக எடுக்காமல் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் முருகன் மீது மேலும் நான்கு பிரிவுகளில் புதிதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருக்கும் முருகன் மீது சிறை காவலர்கள் பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆபாசமாகத் திட்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன