Daily Horoscope
✕

தினகரனை சந்தித்த 4 அதிமுக எம்.எல்.ஏக்கள்; பரபரப்பு தகவல்

Updated: வெள்ளி, 22 ஜூன் 2018 (18:01 IST)
அதிமுகவில் இருந்து தனி அணியாகவும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற தனிக்கட்சியாகவும் செயல்பட்டு வரும் தினகரன் கட்சியில் ஏற்கனவே தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் உள்பட 19 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. 
 
இந்த நிலையில் அதிமுகவில் உள்ள 4 எம்.எல்.ஏக்கள் டி.டி.வி.தினகரனை திடீரென ரகசியமாக சந்தித்து பேசியுள்ளதாக வெளிவந்துள்ள தகவலால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
 
தற்போது குற்றாலத்தில் டிடிவி தினகரனும் அவருடைய ஆதரவாளர்களும் ரகசிய ஆலோசனை செய்து வருவதாகவும், விரைவில் 4 எம்.எல்.ஏக்கள் தினகரன் அணியில் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்படி மேலும் 4 எம்.எல்.ஏக்கள் அணி மாறினால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி கவிழ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் விரைவில் தமிழக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாம் காட்டு

அரசு ஊழியர்கள் சொத்து விபரங்களை தாக்கல் செய்ய கெடு!.. தமிழக அரசு அதிரடி...

பழனியில் குடிநீர் தொட்டியில் மலம்!.. 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு...

அடுத்தடுத்து வரும் இடைத்தேர்தல் எதிரொலி: தி.மு.க மறுசீரமைப்பு பணிகளை ஒத்திவைக்க திட்டமா?

இந்த வருடமாவது நோபல் பரிசு கொடுங்கள்.. அடங்காத அமெரிக்க அதிபர் டிரம்ப்..

2031 சட்டசபை தேர்தல்தான் டார்கெட்!.. தனுஷோட பிளானே இதுதான்!..

அடுத்த கட்டுரையில்
Show comments